2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காட்டு யானை அட்டகாசத்தால் 5 வீடுகள் நாசம்

Thipaan   / 2015 மே 02 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தாந்தாமலை கிராம சேவையாளர் பிரிவில் இன்று சனிக்கிழமை (02) அதிகாலை புகுந்த காட்டு யானை ஒன்று 5 வீடுகளை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளது.

அத்துடன் அவ் வீடுகளிலிருந்த நெல் அரிசி மற்றும் உணவுப் பொருள்களை உண்டுவிட்டு அங்கிருந்த பொருள்களையும் சேதப்படுத்திவிவட்டுச் சென்றுள்ளது.

நேற்றிரவு கிராமத்துக்குள் புகுந்த யானையால் அல்லோல கல்லோலப்பட்ட மக்கள் யானையை விரட்டுவதற்கு பல்வேறு பிரயத்தனங்களை எடுத்த போதும் அவ் யானை 5 வீடுகளை உடைத்துச் சென்றுள்ளது.

இவ்வீடுகளை சனிக்கிழமை அதிகாலை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் நேரில் சென்று பார்வையிட்டுதுடன் பிரசேத செயலாளர், கிராம சேவையாளர், வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றுக்கு அறிவித்து நடவடிக்கை குறித்துக் கலந்துரையாடினார்.

குறித்த யானை கடந்த வருடமும் மே மாதம் முதல் இப்பிரதேசத்தில் ஒரு தொகை வீடுகளை உடைத்துள்ளதாகவும். சுமார் 3 மாதங்கள் வரையில் இந்த யானை அட்டகாசம் செய்திருந்ததாகவும் தெரிவிக்கும் கிராம மக்கள், இந்த வருடத்திலும் அவ்வாறு நடைபெறும் என்றும் தெரிவிப்பதுடன் அதிலிருந்து பாதுகாத்துத் தருமாறும் கேட்கின்றனர்.

அதே நேரத்தில் தொழில் மற்றும் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு நட்டஈடுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று வடக்கு. கோரளைப்பற்று தெற்கு. ஏறாவூர் பற்று. மண்முனை மேற்கு. மண்முனை தென்மேற்கு. போரதீவு பற்று ஆகிய 6 பிரதேச செயலாளர் பரிவுகளில் யானைகளின் பிரச்சினைகள் காணப்படுகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .