2025 ஜூலை 12, சனிக்கிழமை

மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் கைது

Gavitha   / 2015 மே 06 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபோசன்

மண்டூதம்பலவத்தைப் பிரதான வீதியில் மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபரை செவ்வாய்க்கிழமை (05) கைது செய்ததாக  வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.

வெல்லாவெளிப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட வெல்லாவெளி வீதிப் போக்குவரத்து பொலிஸார் தம்பலவத்தை வீதியில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த நபரை நிறுத்தி பரிசோதித்துள்ளனர்.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்தவர் மது அருந்தியுள்ளமை தெரியவந்தவுடன் அவரை கைது செய்யதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவருக்கு எதிராக எதிர்வரும் 11ஆம் திகதி  குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும்  வெல்லாவெளிப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .