2025 மே 17, சனிக்கிழமை

விபத்தில் மூன்று மாணவர்கள் படுகாயம்

Suganthini Ratnam   / 2015 மே 25 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் இன்று திங்கட்கிழமை காலை  பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த  டிப்பர்  ரக வாகனமொன்று விபத்துக்குள்ளானததால், அதில் பயணித்த மாணவர்கள் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் கு.சுகுணன் தெரிவித்தார்.

தேற்றாத்தீவு கண்ணகியம்மன் கோவிலில் சிரமதானத்துக்காக தேற்றாத்தீவிலுள்ள பாடசாலையொன்றிலிருந்து மாணவர்களை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த இந்த டிப்பர் ரக வாகனத்தின் பின்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த  சில்லொன்று  கழன்றுள்ளது. இந்த நிலையில், இந்த   வாகனம் சரிந்து விபத்துக்குள்ளானது.

இதன்போது, காயமடைந்த மாணவர்கள் மூவரும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் உடனடியாக  அனுமதிக்கப்பட்டனர். இதில்  ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி  வைத்திய அத்தியட்சர் டாக்டர் கு.சுகுணன் கூறினார்.

இந்த விபத்து தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .