2025 மே 17, சனிக்கிழமை

கால்நடை வளர்ப்பாளர்களுடன் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் சந்திப்பு

Suganthini Ratnam   / 2015 மே 25 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாதவணையாறு, மைலத்தமடு ஆகிய பிரதேசங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் நேற்று  ஞாயிற்றுக்கிழமை  விஜயம் செய்து அங்குள்ள குறைநிறைகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

இதன்போது, மேய்ச்சல்தரை விடயம் சம்பந்தமாக கால்நடை வளர்ப்பாளர்களுடன் கிழக்கு மாகாண விவசாய மற்றும் கால்நடை அமைச்சர் கலந்துரையாடினார். அத்துடன்,  கால்நடை வளர்ப்பாளர்களின் பிரதேசங்களையும் அத்துமீறி அயல் மாவட்ட பெரும்பான்மையினர் குடியேறியுள்ள பிரதேசங்களையும் சென்று பார்வையிட்டார்.

இவ்விடயம் தொடர்பாக விரைவாக மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடி இதற்கான தீர்வை  பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .