2025 மே 17, சனிக்கிழமை

வறிய மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 மே 28 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

வாழைச்சேனை  பேத்தாளைப் பிரதேசத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற குடும்பங்ளைச் சேர்ந்த மாணவர்களுக்கான பிரத்தியேக பாடங்களுக்கான கல்விச் செலவின் ஒரு பகுதியை பேத்தாளை விபுலானந்தா பழைய மாணவர்கள் சங்கத்தினர் நேற்று புதன்கிழமை வழங்கி வைத்தனர்.

பாடசாலையின் அதிபரும் பழைய மாணவர் சங்கத் தலைவருமான த.சங்கரலிங்கம் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதல் கட்டமாக க.பொ.த. உயர்தர விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் 4 மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்வதற்கான உதவிப் பணம் வழங்கப்பட்டது.

யுத்தம் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளால் இப்பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட கல்வி மற்றும் புறக்கிருத்திய நடவடிக்கைகளை எதிர்காலத்தில் பாடசாலையின் பழைய மாணவர்களை ஒன்றிணைத்து விரிவு படுத்துவதோடு ஏனைய மாணவர்களுக்கான இலவச பரீட்சைக் கருத்தரங்குகள், இலவச பரீட்சை செயலமர்வுகளை ஏற்பாடு செய்யவுள்ளதாக பழைய மாணவர் சங்கச் செயலாளர் எம்.பிரகாஷ் தெரிவித்தார்.

'இன்று பாடசாலை மாணவர்கள் பிரத்தியேக வகுப்புகளில் தங்கியிருக்கும்; யுகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலை மாற்றப்பட வேண்டும். பாடசாலைகள் மீது மாணவர்களுக்கு நம்பிக்கை உருவாகும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .