2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பட்டமளிப்பு விழா

Kogilavani   / 2015 மே 29 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன், வா.கிருஸ்ணா

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஒன்றரை வருட டிப்ளோமா கற்கையை பூர்த்தி செய்தவர்களுக்கான பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை (28) மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பிலுள்ள முன்பள்ளிகளில் கடமைபுரியும் 115 ஆசிரியையகள் இதன்போது, டிப்ளோமா பட்டங்களைப் பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மாகாண கல்வி அமைச்சர் ரி.தண்டாயுதபாணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.  

இதன்போது உரையாற்றிய அவர்,

'இம்மாகாணத்தில் 3900 முன்பள்ளிகள் இயங்குகின்றன. அவற்றில் கடமைபுரியும் ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவுகளை வழங்க கிழக்கு மாகாண சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பாடசாலை நிர்வாகத்தினர் பாடசாலையில் சிறந்த அடைவு மட்டங்களைப் பெறுவதற்;கு முயற்சிக்கவேண்டுமே தவிர கட்டடம், தளபாடம், ஆளணி போன்றவற்றை மட்டம் பெறுவதில் ஆர்வம் செலுத்தக்கூடாது.

மைத்திரிபால் சிறிசேனாவை ஜனாதிபதியாக்கயதில் முக்கிய பங்கு கொண்டவர்கள் தமிழ் முஸ்லிம் மக்கள். ஆனால் அவர்கள் எந்தப் பயனும் அடையவில்லை. விரைவில் பயன்களை அடைய தமிழ் முஸ்லிம் அரச தலைவர்கள் ஒன்றுபட வேன்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.  

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் இந்திரகுமார் நித்தியானந்தன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், கிழக்கு மாகாண பாலர் கல்வி பணியக அதிகாரிகள், மாகாண கல்வி அமைச்சு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .