Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 மே 29 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம், இன்று வெள்ளிக்கிழமை (29) போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் கூட்டமாக இந்த கூட்டம் நடைபெற்றது.
இவ்வாண்டின் போரதீவுப்பற்று பிரதேச அபிவிருத்திக்காக 194 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர்.
கிராமத்துக்கு ஒரு திட்டம் வேலைத்திட்டத்தின் கீழ் ரூபாய் 43 மில்லியனும் வீடமைப்பு அதிகாரசபையின் ஊடாக ரூபாய் 111 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
போரதீவுப்பற்றில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.
அத்துடன், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்கள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago