2025 மே 16, வெள்ளிக்கிழமை

'ஆட்சிகாலம் நிறைவதற்குள் கல்வி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும்'

George   / 2015 மே 29 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண சபையில் எமது ஆட்சிக்காலம் முடிவதற்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் காணப்படும் அனைத்து கல்விப்பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வு காணவோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை(28) பிற்பகல் காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தில் நடைபெற்ற பாடசாலை நூலக கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பாடசாலையின் அதிபர் ஜனாபா நயிமா சலாம் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் முதலமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்ககை எடுத்து வருகின்றோம். சில பாடசாலைகளில் சில பாடங்களுக்கான ஆசியர் பற்றாக்குறை உள்ளது அவற்றையும் நிவர்த்தி செய்வதோடு பாடசாலைகளுக்கு தேiவாயன வளங்களையும் அதிகரிக்க உள்ளோம் என்றார்.

இவ்வாறான விடயங்கள் நடக்குமாக இருந்தால் எந்த பற்றாக்குறை இருக்காது. கிழக்கு மாகாணத்துக்கு வெளியே கடமையாற்றும் ஆசிரியர்களை மாகாணத்துக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.  அதிகமான பாடசாலைகளில் இருந்து கட்டடத்துக்கான கோரிக்கைகளே வருகின்றன.

தற்போதைய தகவல் தொழிநுட்பத்தை பயன்படுத்தி மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும். ஒரு பாடசாலையைப் பொறுத்த வரைக்கும் மாணவர்கள் மற்றும் அதிபர், ஆசியரிர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் இவர்கள் அனைவரும் கூட்டு முயற்சியினை மேற்கொள்வார்களாக இருந்தால் அந்தப்பாடசாலை கல்வியிலும் ஏனைய துறைகளிலும் முன்னேற்றமடையும் எனவும் முதலமைச்சர் கூறினார்.

இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், மற்றும் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சேகு அலி, காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி எம்.ஏ.பதுர்தீன், காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சல்மா ஹம்சா உட்பட பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஆசியரிகள் மாணவர்கள், முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .