2025 மே 16, வெள்ளிக்கிழமை

மியன்மார் அகதிகளுக்கு ஆதரவு கோரி கையெழுத்து வேட்டை

George   / 2015 மே 29 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.டி.யுதாஜித்

மியன்மார் அகதிகளுக்கு ஆதரவு தேடும் வகையில் கையெழுத்து வேட்டை ஒன்றை தேசத்தின் நண்பர்கள் அமைப்பு மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை(29) பகல் ஆரம்பித்துள்ளது.

இந்த கையெழுத்துப் பத்திரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதிகள் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

இலங்கைப் பிரஜைகள் என்ற வகையில் மியன்மாரில் நடைபெற்றுவரும் வன்முறைகளை கண்டிப்பதுடன், அம்மக்கள் படும் துயரத்தினை எண்ணி மனம் வருந்துகிறோம்.

அம்மக்களின் மரணத்தினைத் தடுத்து நிறுத்த வேண்டும். அத்துடன், ஐக்கிய நாடுகள் மனிதாபிமானத்தினைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான தற்காலிக தங்குமிடத்துக்கான ஏற்பாடு செய்தாக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள், தேசத்தின் நண்பர்கள் அமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .