Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Menaka Mookandi / 2015 மே 29 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் திரியசவிய கடன்களை பயணாளிகளுக்கு வழங்க வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திட்ட முகாமையாளர்கள் மற்றும் அதன் உத்தியோகஸ்தர்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை (28) பிற்பகல் மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திட்ட முகாமையாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'திரியசவிய எனும் இக்கடன் திட்டமான வறியவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கடனை ஒரு இலட்சம் ரூபாய் வரை பெறமுடியும்' என்றார்.
'மூன்று வருடங்களுக்குள் இதை செலுத்தி முடிக்க வேண்டுமென்டிருந்த கால எல்லையை நான் ஐந்து வருடங்களாக மாற்றியுள்ளேன். இந்தக் கடனை பெறுபவர்கள் ஐந்து வருட காலத்திற்குள் திருப்பி செலுத்தி முடிக்க வேண்டும்.
சமுர்த்தி திட்டத்தின் பயணாளிகள் மற்றும் சிறு குழுவில் அங்கத்தவர்களாக உள்ளவர்கள் இதனைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த கடனை பெறும் ஒருவருக்கு, அவரது சிறு குழுவின் ஏனைய உறுப்பினர்கள் பிணையாளியாக இருப்பதுடன் சிறு குழு அல்லாதவர்களுக்கு அரச உத்தியோகத்தர்கள் இருவர் பிணையாளியாக இருக்க முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சில நிறுவனங்கள் அதிக வட்டிக்கு கடன்களை கொடுக்கின்றன. இதனால் ஏற்படும் விபரீதங்களை நாம் அன்மைக்காலமாக அவதானித்து வருகின்றோம். நுண்கடன் எனும் பெயரில் மக்களை கொள்ளையிடும் முயற்சிகள் இந்த மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன.
மிகவும் இலகுவான முறையில் குறைந்த வட்டி வீதத்தில் இந்த திரியசவிய எனும் கடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை வறிய மக்கள் பயன் படுத்திக் கொள்ள முடியும். இந்த திட்டத்தினை துரிதமாக முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும்' என அவர் மேலம் கூறினார்.
இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பி.குணரட்னம் மற்றும் வங்கி நடவடிக்கைகளுக்கான பிரதிப்பணிப்பாளர் திருமதி சனந்த பியசிறி உட்பட முகாமையாளர்கள் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago