2025 மே 16, வெள்ளிக்கிழமை

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மக்கள் சந்திப்பு

Princiya Dixci   / 2015 மே 31 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பு, காத்தான்குடி குட்வின் சாந்தியில் நேற்று சனிக்கிழமை (30) இடம்பெற்றது.

நல்லாட்சிக்கான பிராந்திய சூறாசபை உறுப்பினர் வித்தியாகீர்த்தி எம்.எம். அமீரலி தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றது.

சமகால அரசியல் விடயங்கள், ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான நிலைப்பாடுகள் மற்றும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பங்குபற்றுதல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் எம்பி.எம். பிர்தௌஸ் ஆகியோர் விசேட உரைகளை நிகழ்த்தினார்கள்.

இம்மக்கள் சந்திப்பில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய சூறாசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .