2025 மே 16, வெள்ளிக்கிழமை

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்துக்கு புதிய தலைவர்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 01 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் புதிய தலைவராக றவூப் ஏ மஜீட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவரான இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்ற காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பொதுக்கூட்டத்தின்போது புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் தலைவராக றவூப் ஏ மஜீட், செயலாளராக அஸ்ஸெய்ஹ் ஏ.எல்.எம்.சபீல் நழீமி, பொருளாளராக பி.எம்.பாயிஸ், பிரதி தலைவராக சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத், உப தலைவர்களாக எம்.ஏ.முபாறக், மௌலவி எம்.நழீம், எம்.ஐ.இஸ்மாயில், எம்.கிபத்துல் கரீம், எம்.அபுல் காசீம், பிரதி செயலாளர்களாக ஏ.எல்.இஸட்.பஹ்மி, எம்.சி.எம்.ஜௌபர் உள்ளக கணக்குப் பரிசோதகர்களாக எஸ்.எல்.ஏ.கபூர், எம்.அன்சார் நழீமி, எம்.எச்..எம்.நழீம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இங்கு கருத்து தெரிவித்த புதிய தலைவர் றவூப் ஏ.மஜீட், 'சம்மேளத்தின் பணி இந்தப் பிராந்தியத்தில் மிகவும் மகத்தானது. அனைவரும் ஒற்றுமையுடன் இந்தப்பணியை மேற்கொள்ள வேண்டும்.

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் இன்று இந்த நாட்டில் அனைவரும் சிறப்பாக பேசுமளவுக்கு இது வியாபித்திருக்கின்றது என்றால், அதற்கு காரணம் மர்ஹும் அஸ்ஸஹீட் அகமட் லெவ்வையாகும்.

அவரை இந்த நேரத்தில் நினைவுகூருகின்றேன். அவருக்காக பிரார்த்திப்போம்' என்றார்.

காத்தான்குடியையும் அதனை அண்டியுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் இருந்து 200 க்கும் மேற்பட்ட பொது நிறுவனங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் சமூகசேவை அமைப்புக்களில் இருந்து முக்கியஸ்தர்கள் அங்கத்தவர்களாக உள்ளனர்.
காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தில் 12 உபகுழுக்கள் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .