Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Thipaan / 2015 ஜூன் 01 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன், ஆர்.ஜெயஸ்ரீராம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள முள்ளுச்சேனைக் குளத்திலிருந்து திங்கட்கிழமை (01) ஆணொருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மீட்கப்பட்ட சடலம் சுமார் 50 வயது மதிக்கத் தக்க ஒருவருடையதாக இருக்கலாம் எனத் தெரிவித்த பொலிஸார், சடலம் நீரில் மிதந்ததால் பொருமிப் போய் இருப்பதாகவும் கூறினர்.
அடையாளம் காணப்படாத இச்சடலம் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீப காலத்தில் யாரேனும் காணாமல் போனமை குறித்த முறைப்பாடுகள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எந்தவொரு பொலிஸ் நிலையத்துக்கும் கிடைக்கப்பெறவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் தலைமையகம் தெரிவத்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago