2025 மே 16, வெள்ளிக்கிழமை

இலவச தயார்படுத்தல் வகுப்புக்கள்

Thipaan   / 2015 ஜூன் 01 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி. யுதாஜித்

அரச பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்படும் போட்டிப் பரீட்சைகளுக்கான இலவச தயார்படுத்தல் வகுப்புக்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலக பொது வேலைவாய்ப்பு சேவை நிலையத்தினால் நடத்தப்படவுள்ளனதாக மட்டக்களப்பு மாவட்ட மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.சுரேந்திரன் தெரிவித்தார்.

 புகையிரத நிலைய அதிபர் தரம் 3, பதிவாளர் வகுப்பு தரம் 3, வனவிரிவாக்கல் உத்தியோகத்தர் ஆகிய பதவிகளுக்கு விரைவில் பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்ட பொது வேலைவாய்ப்பு நிலையத்தினால் நடத்தப்படவுள்ள இவ் வகுப்புகளில் குறிப்பிட்ட போட்டிப் பரீட்சைகளுக்கு விண்ணப்பித்தவர்கள் பங்கு பெற முடியும்.

இலவசமாக நடைபெறவுள்ள இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் மட்டக்களப்பு மாவட்ட பொது வேலைவாய்ப்பு நிலையத்துடன் தொடர்பு கொண்டு பதிவினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு  மட்டக்களப்பு மாவட்ட பொது வேலைவாய்ப்பு நிலையம் மாவட்ட செயலகம், மட்டக்களப்பு. அத்துடன், திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் 0652227193 என்ற தொலைபேசி இலக்கத்துடனும்  தொடர்பு கொள்ள முடியும்.

மட்டக்களப்பு மாவட்ட பொது வேலைவாய்ப்பு நிலையத்தினால் தொழிலை எதிர்பார்த்து இருப்பவர்களுக்காக, தனியார் துறையில் தொழில் வாய்ப்புக்களை பெறுவதற்காக பதிவுசெய்தல், அதற்கேற்றால் போல் வேலைவாய்ப்பினைப் பெற ஏற்பாடு செய்தல், பொருத்தமான தொழில் சார் பயிற்சிகளை வழங்க தொழில்சார் நிறுவனங்களிற்குப் பரிந்துரை செய்தல், அத்துடன் தொழில் வழிகாட்டல்களை மேற்கொள்ளுதல்.

அதேவேளை, தொழில் வழங்குனர்களிடமிருந்து அவர்களது நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களைப் பதிவு செய்தல், வெற்றிடத்துக்குத் தேவையான ஊழியர்களை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற சேவைகளையும் மேற்கொண்டுவருகிறது.

உலகத்தரத்திலான இலங்கை ஊழியர்களை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு செயற்பட்டுவரும் பொது வேலைவாய்ப்பு நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு இலவசமாக வழங்கப்படும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .