Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 01 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஏறாவூர் வாவிக்கரையோரப் பூங்கா, ஏறாவூர் நகர சபை உத்தியோகஸ்தர்களால் திங்கட்கிழமை (01) துப்புரவு செய்யப்பட்டதாக நகர சபைச் செயலாளர் எம்.எம்.எம். ஹமீம் தெரிவித்தார்.
வீட்டையும் சூழலையும் சுத்தமாகப் பேணி இயற்கை எழிலை நிலைபேறானதாக வைத்திருக்கும் தொடர் நடவடிக்கையாக இந்தத் துப்புரவு சிரமதானப் பணிகள் இடம்பெற்றதாகவும் இதில் நகர சபை அலுவலர்கள் சகலரும் ஈடுபட்டதாகவும் ஹமீம் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் திட்டச் செயலகம் (UNOPS United Nation Office of the Project Secretariat) இதற்கான அனுசரணையை வழங்கியிருந்தது.
வாவிக்கரையோரப் பூங்காத்திடல் முழுமையாக துப்புரவு செய்யப்பட்டதுடன் அங்கு சுற்றாடலைப் பேணும் வகையில் மரநடுகையும் இடம்பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago