Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 02 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
மாகாணசபையானது சிறுபான்மை மக்களின் அதிகாரப் பங்கீட்டோடு சம்மந்தப்பட்ட விடயமாகும். வடக்கு, கிழக்கில் அதிகாரப்பங்கீட்டை ஏற்றுக்கொண்டவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள், அனுசரித்துப் போகக்கூடியவர்கள் என பலதரப்பட்டோர் காணப்படுகின்றார்கள். இதற்கப்பால் மாகாணசபை முறையை ஏற்றுக்கொண்டு செயற்படுவதற்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் கிழக்கு மாகாணத்தில் எவ்வாறுள்ளது என்பது தொடர்பில் இரா.துரைரெத்தினத்திடம் செவ்வாய்க்கிழமை (02) கேட்டபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 'கடந்த காலத்தில் நியமனங்கள், நிதியொதுக்கீடுகள், அபிவிருத்திகள் உள்ளிட்ட பல விடயங்களில் தமிழ் மக்கள் கிழக்கு மாகாணசபையால் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வாறான புறக்கணிப்புக்கள் இனிமேலும் தொடரக்; கூடாதென்பதற்காக கிழக்கு மாகாணசபையில் தமிழர்கள் ஆட்சியாளர்களாக மாறவேண்டும்.
இதற்கமைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது' என்றார்.
'கிழக்கு மாகாணத்தில் மூவினத்தவர்களும் வாழ்வதால், மூவினத்தவர்களும் இணைந்து ஆட்சி புரிவதென்பது மக்களின் மனங்களுடன் ஒன்றிணைந்த ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமாகும். இந்த மாகாணத்தில் தற்போது ஆட்சி அமைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் வேலைத்திட்டங்களை வகுக்கவேண்டும்' எனவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago