2025 மே 16, வெள்ளிக்கிழமை

அதிபர்கள், ஆசிரியர்கள் கல்வித் திணைக்களத்துடன் தொடர்புகொள்ள அ.அ.இ. அவசியம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 02 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மாகாண கல்வித் திணைக்களத்துடன் நேரடியாக அல்லது மாகாண கல்வித் திணைக்களத்தினூடாக ஏனைய காரியாலயங்களுடன் நிர்வாக ரீதியான தொடர்புகளை ஏற்படுத்தும் எந்தவொரு அதிபரும் ஆசிரியரும் தமது பெயருடன் அடையாள அட்டை இலக்கத்தை குறிப்பிடவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று  சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும்  கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் அறிவித்துள்ளார்.

இந்த மாதத்திலிருந்து இது  நடைமுறைக்கு வந்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடையாள அட்டை இலக்கம் குறிப்பிடாத  அதிபர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீளத் திருப்பியனுப்பப்படும்.  அத்துடன், அதிபர்கள் மற்றும்  ஆசிரியர்களின் வேண்டுகோள்களை, கடிதங்களை முன்னிலைப்படுத்தும் அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனம்  செலுத்த வேண்டுமென்பதுடன், அடையாள அட்டை இலக்கமின்றி முன்னிலைப்படுத்தும் அதிகாரிகளுக்கு எதிராக விளக்கமும் கோரப்படும்.

இந்நடைமுறை தொடர்பில் அதிபர்கள்,  ஆசிரியர்களுக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .