2025 மே 16, வெள்ளிக்கிழமை

காசுக்கான வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 03 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்  

இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்புக் கிளை ஒக்ஸ்பாம் சர்வதேச நிறுவனத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள  எட்டு கிராம  அலுவலர் பிரிவுகளில் காசுக்கான வேலைத்திட்டம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த வெள்ளத்தின்போது  பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் மிக வறிய மக்களுக்கு உதவும் நோக்கோடு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள பாவற்கொடிச்சேனை, காந்திநகர், சொறுவாமுனை, மகிழவெட்டுவான், கொத்தியாபுலை, பன்சேனை, வவுணதீவு, ஆயித்தியமலை வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் கிராம உத்தியோகத்தர்களினால் தெரிவுசெய்யப்பட்ட 200 மிக வறிய மக்கள் இத்திட்டத்தின் பயனாளிகளாவர்.

பிரதேச செயலகத்தினால் தீர்மானிக்கப்பட்ட கிராமத்திற்கான பொது வேலைத் திட்டம் ஒன்றினை நிறைவேற்றும் செயற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட வறிய மக்கள் ஈடுபட்டு அதற்காக வழங்கப்படும் கொடுப்பனவை இம்மக்கள் பெற்றுக் கொள்வர்.

இத்திட்ட நடைமுறைப்படுத்தலுக்கு அப்பகுதி பிரதேச செயலக திட்டமிடல் உதவிப்பணிப்பாளர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் கிராம  உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்கள் ஆகியோரின் முழு ஒத்துழைப்போடு காசுக்கான வேலைத்திட்டம், நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .