2025 மே 16, வெள்ளிக்கிழமை

நிதி மோசடி தொடர்பில் மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 04 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் நடத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியில் இடம்பெற்ற  நிதி மோசடி தொடர்பில்; கிழக்கு மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் நேற்று புதன்கிழமை ஊடகங்களுக்கு  தெரிவித்த அவர், 'கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கிடையில் விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டது.

இந்த விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களின் நலன் கருதி  உணவு மற்றும் குளிர்பானம் உட்பட மாணவர்களின் செலவுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  ஆனால், இவ்வாறு ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் மாணவர்களுக்கான வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லையென மாணவர்களினாலும் ஆசிரியர்களினாலும் அதிபர்களினாலும் எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிதி மோசடி  தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் என்னிடம் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்படவேண்டும் என கல்வி அமைச்சரையும் உரிய அதிகாரிகளையும் கோருவதுடன் இதன்போது பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .