2025 மே 16, வெள்ளிக்கிழமை

கழிவுப்பொருட்களினால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி

Princiya Dixci   / 2015 ஜூன் 05 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

கழிவுப்பொருட்களைக் கொண்டு மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் கைவினைத்திறன் கண்காட்சி, மட்டக்களப்பு, வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05) நடைபெற்றது.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, 'ஏழு பில்லியன் கனவுகள், ஒரே உலகம் மற்றும் அவதானமாக நுகர்வோம்' எனும் தொனிப்பொருளில் இக்கண்காட்சி கல்லூரியின் அதிபர் ஆர். கனகசிங்கம் தலைமையில் நடைபெற்றது. 

யுனொப்ஸ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை என்பன இணைந்து இப்பொருட்காட்சியை ஏற்பாடு செய்திருந்திருந்தன.

மீள் சுழற்சிக்குரிய பிளாஸ்டிக், கண்ணாடிப் போத்தல்கள், உக்கக்கூடிய பொருட்கள், சிரட்டை மற்றும் ரெஜிபோம் என்வற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்கள் இதன்போது காட்சிக்கு வைக்கப்பட்டன.

யுனொப்ஸ் திட்ட முகாமையாளர் எம்.உஸ். சிம்ஒன்டா, ஐ.எப்சி சிரேஷ்ட இயக்க உத்தியோகஸ்தர் கிறேம் ஹாரிஸ், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பொருட்களைப் பார்வையிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .