2025 மே 16, வெள்ளிக்கிழமை

கைப்பேசி மூலமாக பண மோசடி

Suganthini Ratnam   / 2015 ஜூன் 09 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-.ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தொலைபேசி அழைப்பில் ஏமாந்து 55,000 ரூபாவை  பறிகொடுத்த சம்பவம்  தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் தம்மிடம் நேற்று செவ்வாய்க்கிழமை (09) முறைப்பாடு செய்துள்ளதாக   ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர், புன்னைக்குடா வீதியைச் சேர்ந்த பாண் வியாபாரிக்கே இக்கதி நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
'கையடக்கத் தொலைபேசி  நிறுவனமொன்றிலிருந்து தொடர்புகொள்வதாகக் கூறிய ஒருவர், ஏழு இலட்சம் ரூபாய் பரிசுத்தொகை எனக்கு  விழுந்துள்ளதாகவும் அதை பெறவேண்டுமாயின், வங்கிக்கணக்கில் 55,000 ரூபாவை  வைப்பிலிடுமாறும் கூறினார்.

அதன்படி 55,000 ரூபாவை  வைப்பிலிட்டுவிட்டு,  அழைப்பு வந்த தொலைபேசி எண்ணுடன் தொடர்புகொண்டபோது அது செயலிழந்திருந்தது. இதன் பின்னரே பண மோசடி செய்யப்பட்டுள்ளதை  தெரிந்துகொண்டேன்' என பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்வாறான மோசடி அழைப்புக்களில் ஏமாந்து  பணத்தை பறிகொடுக்கவேண்டாம் என ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி தீப்தி விஜயவிக்கிரம கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .