2025 மே 16, வெள்ளிக்கிழமை

காத்தான்குடியில் வாயு துப்பாக்கி காட்சியறை

Suganthini Ratnam   / 2015 ஜூன் 09 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-.எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடியில் வாயு துப்பாக்கி விற்பனை காட்சியறை முதல் தடவையாக திங்கட்கிழமை (08) மாலை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

விவசாயச் செய்கைகளை  மிருகங்களும் பறவைகளும் சேதப்படுத்தாதவாறு  அவற்றை துரத்துவதற்காக இந்த வாயு துப்பாக்கிகளை விவசாயிகள்  பயன்படுத்தமுடியும்.  ஆனால், அவற்றை சுட்டுக்கொல்ல முடியாதென்றும்  இந்த நிறுவன உரிமையாளர் எஸ்.எச்.எம்.சமீம் தெரிவித்தார்.

'துரத்துங்கள், கொல்லாதீர்கள்' என்ற வாசகத்துடன் வாயு துப்பாக்கிகள் பயன்படுத்தப்படவேண்டும்.  இந்த வாயு துப்பாக்கிகளை  பயன்படுத்தவும்  இதனை விற்பனை செய்யவும்  பாதுகாப்பு அமைச்சு ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கையில் 23 விற்பனை நிலையங்களில்  வாயு துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் இது முதலாவது காட்சியறை.  இதனை பாவிக்கும் ஒருவர் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கேற்ப பயன்படுத்தவேண்டும்.   இந்த வாயு துப்பாக்கியொன்று  12,500 ரூபாவிலிருந்து 50,000 ரூபாய்வரை உள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த வாயு துப்பாக்கியை பெறும் நபர் தனது அடையாள அட்டையின் பிரதியை வழங்கி, தனது கைவிரல் அடையாளத்துடன்  சில ஆவணங்களையும் ஒப்படைக்கவேண்டுமென்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .