2025 மே 16, வெள்ளிக்கிழமை

மூலிகைச்செடிகள் பற்றிய விழிப்புணர்வு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 09 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, ஏறாவூர் - மிச்நகர் ஆயுர்வேத மாவட்ட வைத்தியசாலையில் சுதேச மூலிகைச்செடிகளை  வளர்ப்பதற்கான விழிப்புணர்வுச் செயலமர்வு நேற்று  செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றது.

மூலிகைச்செடிகளை வளர்ப்பதன் அவசியம் பற்றி இங்கு விழிப்புணர்வூட்டப்பட்டது.

காலாகாலமாக  முன்னோரினால் சுற்றாடலில்  பராமரிக்கப்பட்டுவந்த பல அரியவகை மூலிகைச்செடிகள் பற்றி நாம் அறியாதுள்ளளோம். துளசி, கற்பூரவல்லி, ஆடாதோடை, வேலிப்பருத்தி, வேம்பு, கறிவேப்பிலை  உள்ளிட்ட மூலிகைச்செடிகள் நோய் நிவாரணியாகவும்  உணவாகவும் பயன்பட்டன. அத்துடன்,  மூலிகைச்செடிகளினால் இயற்கைச் சமநிலையும் பேணப்பட்டதுடன், அவை இயற்கைக் கிருமிநாசினிகளாகவும் பயன்படுத்தப்பட்டன என்று பிரதேச விவசாயப் போதனாசிரியை எம்.எச்.முர்ஷிதா ஷிரீன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு காணிப் பயன்பாட்டுத் திணைக்களத்தின் அனுசரணையுடன் சுதேச மூலிகைத் தோட்டத்தை அமைப்பதற்கான செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஏறாவூர் நகர பிரதேச செயலக காணிப் பயன்பாட்டு உத்தியோகஸ்;தர் மல்லிகா தாஹிர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .