Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 10 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
எதிர்காலத்தில், இன்னுமொரு தடவை மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்குள் வருவதற்கு உதவி செய்கின்ற மக்களாக நாம் இருக்க கூடாது என வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.
வீட்டுக்கு வீடு கிராமத்துக்கு கிராமம் எனும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயல் மைய்யவாடியை புனரமைக்கும் வேலைத்திட்டத்தினை செவ்வாய்க்கிழமை (09) மாலை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
'இந்தப்பிராந்தியத்தில் இருக்கின்ற சில அரசியல் தலைவர்கள் இந்த நாட்டில் நல்லாட்சி வரக் கூடாது என்றும் மஹிந்த ராஜபக்ஷதான் ஜனாதிபதியாக வரவேண்டும் என்றும் கடுமையாக உழைத்தனர்.
எனினும் தமிழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்று பட்டு, ஒருமித்த கருத்திலே முழுச் சமூகமுமே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வரவேண்டும் நாம் வாக்களித்தோம்.' என கூறினார்.
'எதிர்காலத்தில் இன்னுமொரு தடவை மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்குள் வருவதற்கு உதவி செய்கின்ற மக்களாக நாம் இருக்க கூடாது என நான் விணயமாக கேட்டுக் கொள்கின்றேன்.'
'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்றத்துக்கு வருவதென்பது, எம்மைப் போன்ற சிறுபான்மை மக்களுக்கு மீண்டும் ஒரு பழிவாங்கலுக்கும் இன சுத்தகரிப்புக்கும் அடித்தளமிடும் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.' என தெரிவித்தார்.
'மஹிந்த ராஜபக்ஷவுக்காக எந்த அரசியல்வாதிகள் வக்களாத்து வாங்கினாலும் சமூக வாஞ்சையுடன் ஒற்றுமைப்பட்டு கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தீர்களோ அதேபோன்று, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அந்த தெரிவுக்கு வாக்களிக்கும் மக்களாக இருக்க வேண்டும்.' என அவர் தெரிவித்தார்.
'மட்டக்களப்பு மாவட்டத்தில்; ஒரு முஸ்லிம் பிரதி நிதித்துவத்தை எதிர்காலத்தில் தக்க வைத்துக் கொள்வதென்ற, இனிவரப்போகும் தேர்தல் முறையிலே ஒரு பிரச்சினையான நிலவரம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களுக்குண்டு என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
இரட்டை அங்கத்தவர் தொகுதியாக மட்டக்களப்பு தொகுதி நிர்ணயம் செய்யப்பட்டாலும் கூட இந்தப் பிரசேத்திலே ஒரு முஸ்லிம், நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ள முடியாது.'
'156,000 தமிழ் வாக்குகளையும் காத்தான்குடியும் ஏறாவூரும் சேர்ந்து 51,000 வாக்குகளையும் வைத்துக் கொண்டு ஒரு முஸ்லிம் பிரதி நிதித்துவத்தை எடுக்க முடியுமென்று கதை சொன்னால் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.' என தெரிவித்தார்.
'இங்குள்ள புத்தி ஜீவிகள், அரசியல் முக்கியஸ்தர்கள் இதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதி நிதித்துவத்தை பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற தேவைப்பாடு இருக்கின்றது. அதற்காக கடுமையாக உழைத்திருக்கின்றோம்.'
'வில்பத்து விடயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அந்த வில்பத்து மக்களுக்காக நாங்கள் கிழக்கில் கையெழுத்து வேட்டையை செய்ய விருக்கின்றோம்.
ஜம் இய்யத்துல் உலமா சபை மூலமாக அந்த கையெழுத்து வேட்டையை மேற்கொண்டு இங்குள்ள அனைவரும் கையொப்பத்தை இடவேண்டும். அதை நாங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்க விருக்கின்றோம்.
வில்பத்து முஸ்லிம்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் இதற்காக கிழக்கிலுள்ள அனைவரும் பங்களிப்பு செய்ய வேண்டும்' என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முசம்மில் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதியமைச்சரின் இணைப்பாளர்களான ஏ.எம்.மாஹீர், லெவ்வை ஹாஜியார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
45 minute ago
2 hours ago
4 hours ago