2025 மே 16, வெள்ளிக்கிழமை

மட்டு. வாவியில் மேடைகள் அமைக்க தடை

Kogilavani   / 2015 ஜூன் 10 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு வாவியின் நடுவில் மீனவர்கள் மேடைகள் அமைப்பதை தடைசெய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவியில் மீனவர்கள் எழுந்தமானமாக மேடைகள் அமைத்து மீன்களைப் பிடிப்பதனால் வாவியின் அழகு கெடுவதோடு சுற்றுலா பயணிகளின் வருகையும் வீழ்ச்சி கண்டுவருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் விசனம் தெரிவித்துள்ளார்
மட்டக்களப்பை நோக்கி அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தரும் நிலையில் மீனவர்களின் இத்தகைய செயற்பாடுகள் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேடைகளை அமைப்பதற்காக மண்மூடைகள் மற்றும் டயர்கள் என்பவற்றை பயன்படுத்துவதால்; வாவியின் அழகு கெடுவதோடு சூழல் மாசடையும் நிலையும் உருவாகியுள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .