Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 10 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல்
இனிவரும் காலங்களில் எமது பிரதேசத்திலிருந்து எந்தப் பெண்ணும் வெளிநாடுகளில் கையேந்தாமல் சுயதொழில்களில் ஈடுபட கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.
போரதீவுப்பற்று பிரதேசத்தின் மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் ஆரம்ப விழா, போரதீவுப்பற்று பிரதேசத்தின் தும்பங்கேணி அமுதசுரபி பால் பதனிடும் நிலைத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
'போரதீவுப்பற்று மற்றும் தும்பங்கேணி பிரதேசங்களிலுள்ள மட்டுப்படுத்தப்பட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச்சங்கத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படுகின்ற அமுதசுரபி பால் பதநிடும் நிலையத்தில் கடமை புரிகின்ற இளைஞர், யுவதிகளை கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ளீர்ப்புச்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.
அத்துடன், 'எமது பிரதேசத்திலுள்ள பல பெண்கள் வெளிநாட்டு முகவர்களுடாக ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எனவே, பிரதேசத்திலுள்ள வளங்களை பயன்படுத்தி அனைவருக்கும் வேலைவாய்ப்பினை வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில் எமது பிரதேசத்திலிருந்து எந்தப் பெண்ணும் வெளிநாடுகளில் கையேந்தாமல், சுயதொழில்களில் ஈடுபட கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
50 minute ago
2 hours ago
4 hours ago