2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஒல்லிக்குளம் கிராம வீதிக்கு மின் விநியோகம்

Menaka Mookandi   / 2015 ஜூன் 10 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒல்லிக்குளம் மேற்கு, ஒல்லிக்குளம் கிழக்கு ஆகிய கிராமங்களை இணைக்கும் வீதிக்கு இன்று புதன்கிழமை (10) மின் விநியோகத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இம்மின் விநியோகத் திட்டத்தை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் ஆரம்பித்து வைத்தார். இதன் மூலம் இவ்வீதியில் வசிக்கும் குடும்பங்கள் தமது வீடுகளுக்கான மின்சாரத்தினை பெற்றுள்ளனர்.

இவ்வைபவத்தில் கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக்,
"யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட ஒல்லிக்குளம் பிரதேச மக்கள் மீள்குடியேறியதன் பின்னரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்" என்றார்.

"இவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்து கொடுப்பதற்கான வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாகவே இந்த மின் விநியோகத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்துள்ளோம்" என்று அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .