Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 16, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 11 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
போதைவஸ்து பாவனை ஒட்டுமொத்த மனிதர்களையும் தீயவழிக்கு இட்டுச்செல்லும் என கல்முனை தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ.கபார் தெரிவித்தார்.
மாணவர் மத்தியில் புகைத்தலை தடுப்பதற்கான அறிவூட்டல் கருத்தரங்கு, கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி கிளனி மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இன்றைய மாணவர்கள் நாளைய எதிர்கால தலைவர்கள். அவ்வாறான தலைவர்கள் எவ்வாறான நல்ல பழக்கங்களை கைக்கொள்ளவேண்டும் என்பதை கல்லூரியில் கல்வி கற்கும் காலங்களில் கடைப்பிடிப்பது கட்டாயமாகும்.
தற்போது போதைவஸ்து பாவனை மிக மோசமான நிலையை அடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. போதைப் பாவனையில் எத்தனையோ இலட்சக்கணக்கானவர்கள் அடிமைப்பட்டுள்ளார்கள்.
குறிப்பாக, போதைவஸ்து பாவனையில் மிக முக்கிய இடம்பிடிப்பது புகைபிடித்தலாகும். இந்த பழக்கமானது சிறு பராயத்திலிருந்தே சிலரிடம் ஆரம்பமாகின்றது. இதனால் பலர் சிறுபராயத்திலே இதற்கு அடிமைகளாகி விடுகின்றார்கள்.
புகை பிடிப்பவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதென்பது இலகுவான காரியமல்ல. புகையிலையில் நிக்கொட்டின் எனும் இரசாயன பதார்த்தம் அடங்கியிருப்பதனால் பல தீய விளைவுகளை உண்டு பண்ணுகின்றது. புகையிலை தொடர்பான புகைத்தலை பழகிய ஒருவர் இலகுவில் விடுவதென்பது அது மிகவும் கடினமான விடயமாகும். போதைவஸ்;தை விட அதிகமான பாதிப்புக்களை புகையிலை பாவனையில் ஈடுபடுவோர் எதிர்நோக்குகின்றனர்.
புகை பிடிப்பவர் பாதிக்கப்படுவதுடன் அவருக்கு அருகில் இருப்பவரும் பாதிக்கப்படுகின்றார். ஒரு வருடத்திற்கு 6 இலட்சம் பேர் புகைபிடித்தலால் இறக்கின்றார்கள். அதேபோன்று புகை பிடிக்காமல் அவர்களுக்கு அருகில் இருப்பவர்கள் 60,000 பேர் பாதிப்புக்குள்ளாகின்றார்கள். இதுதான் புகைபிடித்தலால் வரும் பெருங்கேடாகும்.
சட்டவிரோதமான முறையிலும் புகைத்தலை ஊக்குவிப்பவர்களும் எம்மத்தியில் இருக்கின்றார்கள். சிகரட்டை எடுத்துக்கொண்டால் 4,000 வரையான நச்சுத்தன்மைகளைக் கொண்ட இரசாயன பதார்த்தங்கள் அதில் அடங்கியிருக்கின்றன.
புகை பிடிப்பர்களில் வருடமொன்றிற்கு 25 சதவீதமானோர் அதில் இருந்து விடுபடவேண்டும் என்று நினைக்கின்றார்கள் ஏனைய 75 வீதமானோர் இந்தப்பழக்கத்தில் இருந்து மீளமுடியாதவர்களாக தத்தளிக்கின்றார்கள்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
48 minute ago
2 hours ago
4 hours ago