2025 மே 15, வியாழக்கிழமை

வீடுகள் கட்டுவதற்கு பெண்களின் ஒத்துழைப்பு அவசியம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 24 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

வீடுகளை  கட்டும்போது பெண்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் அவசியம் என்று  தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு முகாமையாளர் கே.ஜெகநாதன் தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பிலுள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான செயலமர்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,  'வீடொன்றை நிர்மாணிக்கும்போது பெண்களின் பங்களிப்பும் ஒத்துழைப்பும் அவசியமாகும்.

இந்த வருடத்திலிருந்து தேசிய வீடமைப்பு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. 1978ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் திகதி யாப்பகுவ பிரசேத்தில் பிரேமதாசவினால் முதலாவது மாதிரிக் கிராமம் உருவாக்கப்பட்டது. அந்த தினமே  தேசிய வீடமைப்பு தினமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .