2025 மே 15, வியாழக்கிழமை

பழுதடைந்த பால் பக்கெட்டுக்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 24 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியிலுள்ள முன்பள்ளி பாடசாலையொன்றுக்கு வழங்கப்படவிருந்த  615 பால் பக்கெட்டுக்கள் பழுதடைந்த நிலையில்  இன்று புதன்கிழமை  பொதுச் சுகாதார பரிசோதகர் குழுவினால்  மீட்கப்பட்டன.
இது தொடர்பில் கிடைத்த தகவலைத் தொடர்ந்து,  மேற்படி பால் பக்கெட்டுக்கள் மீட்கப்பட்டன.

மாணவர்களுக்கு இலவசமாக பசும்பால் வழங்கும் தேசிய திட்டத்தின் கீழ் இந்த பால் பக்கெட்டுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

முறையாக பொதி  செய்யப்படாமையே இந்த பால் பக்கெட்டுக்கள்  பழுதடைந்தமைக்கான காரணம் எனத்  தெரிவித்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர், மாணவர்கள் இந்த பாலை  அருந்தியிருந்தால் வாந்திபேதி  உள்ளிட்டவற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் எனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .