2025 மே 15, வியாழக்கிழமை

விதவைப் பெண்ணின் வீட்டுக்கு தீவைத்த 3 இளைஞர்கள் கைது

George   / 2015 ஜூன் 25 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
    

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தளவாய்க் கிராமத்தில் விதவைப் பெண் ஒருவரின் வீட்டுக்கு தீ வைத்து எரித்த சம்பவம் தொடர்பில் 03 இளைஞர்களைக் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
 
புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் தளவாய்க் கிராத்தைச் சேர்ந்த கணேசன் வசந்தா (37) என்றழைக்கப்படும் 03 பெண் பிள்ளைகளின் தாயான இவ் விதவைப் பெண், வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு தீ வைத்துள்ளதோடு வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியதுடன் வீட்டின் வளவில் இருந்த பயன் தரும் மரங்களுக்கும் தீ வைத்து அட்டகாசம் புரிந்துள்ளனர்.
 
இதனால் வீட்டில் இருந்த 180.000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகள் மூலம்  தெரியவந்துள்ளது.
 
இச் சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் வியாழக்கிழமை(25) காலையில் குறித்த இளைஞர்களை கைது செய்ததுடன் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .