Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
George / 2015 ஜூன் 25 , மு.ப. 07:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
கடந்த கால ஆட்சியாளர்கள் செய்த தவறே இன்றைய ஆர்பாட்டங்களுக்கு காரணமாகுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
வேலையற்ற பட்டதாரிகள் வெளிமாகாணம், வெளிமாவட்டங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள்; ஆகியோர் முதலமைச்சரை புதன்கிழமை(24) சந்தித்தபோது இவர் இதனை கூறினார்.
முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர், கிழக்கு மாகாணத்திலவேலையற்ற பட்டதாரிகள், தொண்டர் ஆசிரியர்கள், வெளிமாகாணத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதிக்கான தொழில் வழங்கப்படாதோர் என்று ஒவ்வொரு நாளும் போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இன்று கிழக்கு மாகாணத்தில் புறக்கணிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் இருக்கிறார்கள அவர்களுக்கு கூடிய விரைவில் நிரந்தர நியமனம் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இது தொடர்பில் ஜனாதிபதியுடனும் பேசியிருக்கிறேன். அதுபோன்று வெளிமாகாணங்களில் கற்பிக்கும் கிழக்கு மாகாண ஆசிரியர்களையும் இங்கே உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கிழக்கு மாகாணத்தில் நிலவும் 1,990 ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் தொடர்பான விவரத்தை பெற்றுக்கொண்டிருக்கிறோம்.
கடந்த ஆட்சிக் காலத்தில் கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி மற்றும் கிழக்கு மாகாண ஆசிரியர்களை வெளிமாகாணங்களுக்கு நியமனம் வழங்கி அனுப்பிவைத்தமை போன்ற விடையங்களை முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கண்டும் காணாதது போலிருந்துள்ளார்.
இது சிறுபான்மைச் சமூகங்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் துரோகமாகும். அவர் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நாம் இம்முறை வழங்கப்படவுள்ள தொண்டர் ஆசிரியர் நியமனங்கள் அவரது ஆட்சிக் காலத்தில் புறக்கணிக்கப்பட்ட 110 பேருக்கேயாகும்' என்றார்.
'கிழக்கில் ஆசிரியர் பதவி வெற்றிடம் எதுவும் இல்லை என்று சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறிவருகின்றார். இதில் எந்தளவுக்கு உண்மையுள்ளது என்பதை இன்னும் 2 வாரங்களில் ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்றும் அதற்காக சகல ஆதாரங்களை திரட்டி எடுத்துள்ளேன் என்றும் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago