2025 மே 15, வியாழக்கிழமை

'கட்டடங்கள் கட்டப்படுவது மாத்திரம் அபிவிருத்தி அல்ல'

Suganthini Ratnam   / 2015 ஜூன் 25 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எம்.எம்.அஹமட் அனாம்

துரித வீட்டு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகள்  கட்டுவதற்கான கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு காத்தான்குடி பிரதேச செயலகத்தில்  நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இதன்போது, காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள் ஐந்து பேருக்கு  முதற்கட்ட கொடுப்பனவாக 40,000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 75,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, திவிநெகும பயனாளிகளுக்கு திரியபியச வீடமைப்புத் திட்டத்துக்கு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகப் பிரிவில் இரண்டு பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு திவிநெகும திணைக்களத்தினால் 75,000 ரூபாவும் திவிநெகும திணைக்களத்தின் சமமூக அபிவிருத்தி மன்றத்தினால் 25,000  ரூபாவுமாக தலா ஒவ்வொரு பயனாளிக்கும் ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் திவிநெகும திணைக்களத்தின் சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .