2025 மே 15, வியாழக்கிழமை

'சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பை வழங்கமுடியும்'

Suganthini Ratnam   / 2015 ஜூன் 25 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதன் மூலம் இங்குள்ள இளைஞர், யுவதிகளுக்கு  வேலைவாய்ப்புக்களை வழங்கமுடியுமென்று மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண புவியியல் சார் சுற்றுலா தேசப்பட வழிகாட்டி மற்றும் அதன் இணையத்தளம் அறிமுகம் செய்யும் நிகழ்வு, மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கிழக்கு மாகாணசபையினால் சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்படுகின்றது.
எமது சகோதர, சகோதரிகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்று பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். ஆனால், கிழக்கு மாகாணத்திலேயே அவர்களுக்கு சிறந்த தொழில்கள்; இருக்கின்றன. இந்த நிலையில், சுற்றுலாத்துறையை மேம்படுத்தி அவர்களுக்கு  வேலைவாய்ப்புக்களை வழங்கமுடியும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .