Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 26 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்
புதிய தேர்தல் முறையான 20ஆவது திருத்தம் அமுலுக்கு வருமாக இருந்தால், இந்த நாட்டில் ஐந்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கூட முஸ்லிம்கள் தெரிவுசெய்ய முடியாதென்று முன்னாள் பிரதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
400 வருடங்கள் பழமையானது என்று தொல்பொருள் திணைக்களத்தால் அங்கிகரிக்கப்பட்ட ஏறாவூர் ஆற்றங்கரை முஹிய்யித்தீன் ஜும்மா பள்ளிவாசலை புனரமைத்து திறந்துவைக்கும் நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், '20ஆவது அரசியல் திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் அங்கிகரிக்கப்படுமாக இருந்தால், இப்பொழுது நாடாளுமன்றத்திலுள்ள 20 உறுப்பினர்கள் என்;ற முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தில் முழு இலங்கையிலிருந்தும் ஐந்தை கூட முஸ்லிம்கள் பெற்றுக்கொள்ள முடியாது
கண்டி மாவட்டத்தில் இப்பொழுது 4 பேர், வன்னியில் 3 பேர், மட்டக்களப்பில் 2 பேர் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இருபதாவது திருத்தம் அமுல்படுத்தப்படுமாக இருந்தால், மேற்குறிப்பிட்ட மாவட்டங்களிலிருந்து ஒருவரை கூட தெரிவுசெய்ய முடியாத நிலை தோன்றும். அதேபோன்று ஏனைய பகுதிகளிலும் இடம்பெறும். வன்னி மாவட்ட முஸ்லிம்கள் 100 சதவீதம் வாக்களித்தாலும், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கூட புதிய திருத்தத்தில் பெறமுடியாது. மட்டக்களப்பிலும் அவ்வாறே. சிறுபான்மையினருக்கு பயங்கரமான, ஆபத்தான தேர்தல் முறையை அமைச்சரவை இப்பொழுது அங்கிகரித்துள்ளது. சகல முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயம் தொடர்பில் பேசியிருக்கின்றார்கள்.
முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பை காட்டியதனால், உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு பொதுத் தேர்தலுக்கு போவதற்கும் இரவோடிரவாக பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் ஜாதிக ஹெல உறுமய, பௌத்த தேரர்கள், மகா சங்கத்தினர் ஆகியோர் ஜனாதிபதிக்கு கொடுத்த கடுமையான அழுத்தம் காரணமாக எதிர்பார்த்தபடி நாடாளுமன்றம் கலைக்டகப்படவில்லை.
என்ன விலை கொடுத்தாவது 20ஆவது சட்டத்திருத்தத்தை அங்கிகரித்ததன் பின்னரே நாடாளுமன்றத்தை கலைப்பது என்று இப்பொழுது தீர்மானம் எடுத்துள்ளார்கள். இவ்வாறானதொரு இக்கட்டான சூழ்நிலையிலேயே முஸ்லிம்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்' என்றார்.
இந்நிகழ்வில் கிழக்கு மகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் உட்பட கல்விமான்கள், மார்க்க அறிஞர்கள், பொதுமக்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago