2025 மே 15, வியாழக்கிழமை

அபிவிருத்திகளில் படுவான்கரை புறக்கணிப்பு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 26 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

புதிய அரசாங்கத்தினுடைய நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களில் படுவான்கரை பிரதேசம் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன்; தெரிவித்தார்.

100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே  அவர் கூறினார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  '100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்;களப்பு மாவட்ட அபிவிருத்திக்கென சுமார் 149.28 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டது.  இதில் வாழைச்சேனை மத்திக்கு ரூ.54.25 மில்லியனும்   ஓட்டமாவடிக்கு ரூ.55.00 மில்லியனும் கோறளைப்பற்று தெற்குக்கு  ரூ.10.75 மில்லியனுமாக இஸ்லாமிய பகுதிகளுக்கு மொத்தமாக ரூ.120.00 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  வவுணதீவு, பட்டிப்பளை, போரதீவு பிரதேசங்களுக்கும் ஆரையம்பதி பிரதேசத்திற்கும் எதுவித நிதியும் ஒதுக்கீடு செய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்;தலை இலக்கு வைத்து பயணிக்க முனையும் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பும் குறித்த நிதி ஒதுக்கீட்டு விடயத்தில் மௌனமாக உள்ளது ஜீரணிக்க முடியாத ஒன்றாக உள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .