Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Sudharshini / 2015 ஜூன் 27 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் மற்றும் பல்வேறு காரணங்களால் மாற்றுத்திறனாளிகளானவர்கள், சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்வதற்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கும் சேவை இன்று சனிக்கிழமை (27) கல்லடியில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து வைத்திய நிலையத்தில் நடைபெற்றது.
மாவட்டச் செயலகம் மற்றும் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவனத்துடன் இணைந்து 'சமவசதி வாய்ப்புக்களை ஏற்படுத்துவதினூடாக இலகுவில் பாதிப்புக்குள்ளாகக் கூடிய மக்களுக்கான நிலையான அபிவிருத்தியை நோக்கிய வறுமை குறைப்பு' எனும் தொனிப்பொருளில் ஆரம்பமான இச்சேவையில் மாவட்டத்திலிருந்து 105 பேர் பங்கேற்றனர்.
தேசிய போக்குவரத்து வைத்திய நிலையத்தின் மாவட்டப் பொறுப்பாளர் ரி. ஹரிதேவா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளிகளின் அவயங்களின் பரிசோதனை, இரத்தப் பிசோதனை, கண் பரிசோதனை, இருதய மற்றும் குருதியமுக்கப் பரிசோதனைகள் இடம்பெற்றன.
நுகேகொட தேசிய போக்குவரத்து வைத்திய நிலையத்தின் வைத்தியர்களான கே.எஸ்.எம். சமரசேகர, ஏ.சி. பெரேரா, ஏ. சேனநாயக்கா மற்றும் மட்டக்களப்பு நிலையத்தின் வைத்தியர் கே. தேவேந்திரக்குமார் ஆகியோர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago