2025 மே 15, வியாழக்கிழமை

பொதுக் கட்டட திறப்பு விழா

Sudharshini   / 2015 ஜூன் 27 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பால்சேனையில் பொதுக்கட்டடத் திறப்பு விழா பிரதேச செயலாளர்எஸ். ஆர். ராகுலநாயகி தலைமையில் வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றது.

வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சின் வீட்டுக்கு வீடு கிராமத்துக்கு கிராமம் 15,000 கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்சித் திட்டத்தின் கீழ், இந்த பொதுக் கட்டடம் திருத்தியமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

இவ்விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு திருத்தியமைக்கப்பட்ட கட்டடத்தினைத் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஆர் கங்காதரன், கரையோரல் பேணல் திணைக்களத்தின் கரையோர வலய மீளமைப்புத் திட்ட இணைப்பாளர் ஏ. கோகுலதீபன், தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஆர். ஜெயசோபராஜ், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எஸ். துசியானந்தன்,  நிலாம்சன் குரூஸ், அபிவிருத்தி உத்தியோகத்தர் வி. விவேகானந்தன்  பால்சேனை, நாகபுர கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .