Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Gavitha / 2015 ஜூன் 28 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எம்.அஹமட் அனாம்
இலங்கையின் முதலாவது பாரிசவாத புனர்வாழ்வு நிலையமான 'காருண்யா', வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சனிக்கிழமை (27) திறந்து வைக்கப்பட்டது.
புதிததாக அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு மையத்தில், ஆண்கள் பிரிவு பெண்கள் பிரிவு என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு பிரிவில் ஐந்து பேர் தங்கி சிகிச்சை பெறக்கூடிய வசதியுள்ளதாகவும் அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் உலநல பிரிவின் பொறுப்பாளராக இருக்கும் வைத்திய அதிகாரி ஜூடி ரமேஸ் ஜெயகுமார் தெரிவித்தார்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எஸ்.தட்சணாமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழா நிகழ்வில், பிரதம அதிதியாக சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் திருமதி லக்ஷ்மி சி.சோமதுங்க கலந்து கொண்டதுடன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் எஸ்.சதுர்முகம், உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி ஜே.குமரேசன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எம்.இப்றாலெப்பை உள்ளிட்ட பலரும் அதிதிகலாக கலந்து கொண்டு, பாரிசவாத புனர்வாழ்வு மையத்;தை திறந்து வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago