Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 28 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கான இணைய பாதுகாப்பு தொடர்பான விஷேட இணைய ஊடக கருத்தரங்கு மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வொயிஸ் ஒப் மீடியா நெட்வோர்க் காரியாலத்தில் வெள்ளிக்கிழமை(26) இடம்பெற்றது.
தொழில்சார் இலங்கை இணைய ஊடக சங்கம், கிழக்கு மாகாண ஊடக வள நிலையம், கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனம் ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் ரைட்ஸ் நவ் அமைப்பின் அனுசரணையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஃப்ரெடி கமகே, வொயிஸ் ஒப் மீடியா நெட்வோர்க்கின் தலைவர் அருள் சஞ்சித் , ரைட்ஸ் நவ் நிறுவனத்தின் உத்தியோகத்தர் சாணக்க ரூபசிங்க, மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, இணைய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எவ்வாறு செய்திகளை, தகவல்களை பாதுகாப்பான முறையில் அணுகுவது என்பது தொடர்பில் வளவாளராகக் கலந்து கொண்ட தமிழ்மிரர் இணையத்தளம் மற்றும் பத்திரிகையின் ஆசிரியர் ஏ.பி.மதன், விரிவுரை நிகழ்த்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago