Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 28 , மு.ப. 06:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிளவான காடுகள் அழிக்கப்பட்டதன் காரணமாகவே வெப்பம் கூடிய மாவட்டமாக மட்டக்களப்பு திகழ்வதாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட கல்லடி, உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் உலக சுற்றாடல் தினத்தினையொட்டி விவேகாவின் பசுமை செய்திமடல் வெளியிடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை(26) காலை நடைபெற்றது.
உலக சுற்றாடல் தினம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் நிலையில், அதனால் மாணவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் முதலாவது செய்திமடலாக இது வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் திருமதி ஹரிதாஸ் திலகவதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இராம கிருஸ்ணமிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி சதுர்ப்புஜானந்தஜி மகராஜ், ஆன்மீக அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராஜா கலந்துகொண்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர்,
அகச்சூழல் புறச்சூழல் என்பது தனி மனிதனுக்கும் உள்ளது. ஒரு சமூதாயத்துக்கும் உள்ளது. ஒரு மனிதன் என்னும்போது அவனின் அகம் சுத்தமடையும்போது அவனின் வெளிச்சூழலும் சுத்தமடையும்.
இந்த இரண்டு விடயத்திலும் நாங்கள் கவனம் செலுத்தும்போதே சூழலை பாதுகாக்கமுடியும்.
எதிர்கால சமூதாயத்துக்கு நிலையான வாழ்வினை நாங்;கள் வழங்கவேண்டும் என்றால் ஒரு நிலையான சூழலையும் அவர்களுக்கு வழங்கவேண்டும். இல்லையென்றால் நாங்கள் வாழும் வாழ்க்கையின் காலங்கள் குறைந்துகொண்டே செல்லும்.
இன்று நீர் மாசடைவது என்பது பெரும் பிரச்சினையாக மாறிவருகின்றது. எதனை சுத்தப்படுத்துவது என்றாலும் நாங்கள் நீரினை பயன்படுத்துகின்றோம். ஆனால் இன்று நீரினையே சுத்தப்படுத்தி அருந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு காரணம் நாங்கள் சூழலை பேணாமையே ஆகும்.
சில நாட்களாக கிழக்கு மாகாணத்தில் அதிக்கப்படியான வெப்பம் மட்டக்களப்பிலேயே பதிவாகியுள்ளது. அதற்கு காரணம் மட்டக்களப்பில் அதிகளவான காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
அதன்காரணமாக, மாணவர்கள் இயற்கையில் கவனம் செலுத்தவேண்டும். இந்த பாடசாலையினை பசுமையாக மாற்றவேண்டிய தேவையிருக்கின்றது.
நாங்கள் ஒரு வீட்டை பசுமையாக மாற்றவேண்டும். அதற்காக பயன்தருமரங்களை நடவேண்டும். நாங்கள் பயன்தரும் மரங்களை என்றும் நடுவதில்லை. பயன்தராத மரங்களையே நட்டு பராமரிக்கின்றோம்.
எங்களுக்கு தேவையான மரக்கறிகளை நாங்கள் வீட்டிலேயே வளர்த்;துக்கொள்ளமுடியும். இதன் காரணமாக சூழலும் சிறப்பாக இருக்கும் வாழ்க்கை செலவும் குறைவடையும்.
படுவான்கரையில் மக்களை சுற்றி சகல மரக்கறி வகைகளும் உள்ளன. அவர்கள் அதனைக்கொண்டுவந்து மட்டக்களப்பு நகர்ப்புறங்களில் விற்பனைசெய்துவிட்டு இங்கிருந்து கரட், போஞ்சிக்காயை இங்கிருந்து வாங்கிச்செல்கின்றனர். அந்த பழக்கத்துக்கு அவர்கள் மாறிவிட்டனர்.
மேலைத்தேய நாடுகள் தமது பழமையை நோக்கி பின்நோக்கி சென்றுகொண்டிருக்கின்றார்கள். ஆனால் நாங்கள் இன்னும் மேலைத்தேய கலாசாரங்களுக்கு அடிப்பட்டவர்களாக மாறிக்கொண்டுசெல்கின்றோம். அந்த நிலைமையில் மாற்றம் ஏற்படவேண்டும்.
சூழலை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்றது.இந்த பங்கினை வகிக்கவேண்டிய முக்கியமானவர்களாக மாணவர்கள் உள்ளனர் என்றார்.
சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்தி பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.கங்கேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.உதயகரன்,பிரதேச சுற்றாடல் அதிகாரி திருமதி ஆர்.பாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது அதிதிகளினால் செய்திமடல் வெளியிட்டுவைக்கப்பட்டதுடன் செய்தி மடல் தொடர்பிலான ஆய்வுரையினை சுற்றாடல் முன்னோடி வலய ஆணையாளர் ரி.ஞானசேகரன் நிகழ்த்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago