Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 28 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக், நேற்று சனிக்கிழமை (27) நேரில் சென்று பார்வையிட்டார்.
ஒரு கிராமத்துக்கு 10 இலட்சம் ரூபாய் என்ற ரீதியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 18 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்,
இவ் அபிவிருத்தி வேலைத்திட்டங்களானது முன்னைய அரசாங்கத்தில் அரசியல்வாதிகள் தீர்மானித்து அமுல்படுத்துகின்ற திட்டங்களாக இருந்தன.
தற்போது மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திட்டங்களானது நல்லாட்சியின் கீழ் மக்களிடம் கேட்டறிந்து மக்களுடைய விருப்பத்துதக்கிணங்க முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்களாகும்.
இந்த வகையில் காத்தான்குடி பிரதேச செயலக எல்லைக்குள் 9 வீதிகள், 3 பலநோக்கு கட்டடங்கள் பனரமைப்பு பணிகள், 4 வடிகான் அமைப்பு மற்றும் வடிகான்களுக்கு மூடியிடும் வேலைகள், 2 பொது மயானங்களை துப்பரவு செய்து அழகுபடுத்துகின்ற வேலைத்திட்டங்கள் என 18 வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago