2025 மே 15, வியாழக்கிழமை

விதவைகள் மற்றும் அனாதைகள் குடும்பங்களுக்கு கொடுப்பனவு

Princiya Dixci   / 2015 ஜூன் 28 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள விதவைகள் மற்றும் அனாதைகள் குடும்பத்துக்கு மாதாந்தக் கொடுப்பனவு வழங்குவதற்கான திட்டமொன்று முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக தெரிவுசெய்யப்பட்ட 20 விதவைகள் மற்றும் அனாதைகள் குடும்பங்களுக்கு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு, புதிய காத்தான்குடி அப்றார் பள்ளிவாயல் வளாகத்தில் நேற்று சனிக்கிழமை (27) நடைபெற்றது. 

இதில் முன்னாள் பிரதியமைச்சரும் ஹிறா பவுண்டேசன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் உடபட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, இக் குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு 7,500 ரூபாய் வழங்கப்படவுள்ளதுடன் இந்த திட்டத்துக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் 500 குடும்பங்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .