Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 28 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிஸ்புல்லாஹ் கிராமத்தில் மாடுகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (28) சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூரைச் சேர்ந்த ஹயாத்து முஹம்மது அப்துல் சத்தார் என்பவருக்கு சொந்தமான 45 மாடுகள் காணாமல் போனமை தொடர்பில் ஏறாவூர் மற்றும் கரடியனாறு பொலிஸ் நிலையங்களில் உரிமையாளரால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இன்று ஞாயிற்றுக்கிழமை ஏறாவூரில் இறைச்சிக்காக அறுக்கப்பட்ட மாடொன்றின் தோலைப் பரிசோதித்தபோதே காணாமல் போனதாகக் கூறப்பட்ட மாட்டின் தோல் என உரிமையாளரால் அடையாளம் காணப்பட்டது.
இதையடுத்து அந்த மாடுகளைப் பராமரித்து வந்த கூலியாளான நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
2 hours ago
2 hours ago