Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 28 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். பாக்கியநாதன்
ஏறாவூர்பற்று பால் சேகரிப்பாளர் சங்க அங்கத்தினர்கள் நாளொன்றுக்கு 10,000 முதல் 12,000 லீற்றர் வரை பால் சேகரிப்பதாக இலுப்படிச்சேனை நிலையத்தின் பொறுப்பாளர் திருமதி ரி. றோசாந்தி தெரிவித்தார்.
இலுப்படிச்சேனை பிரதேசத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின்; 6.3 மில்லின் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பால்சேகரிப்பு நிலையம், குளிர வைக்கும் நிலையம் மற்றும் பாலுற்பத்திக்கு பெறுமதி சேர்க்கும் வகையில் அமைக்கப்டவுள்ள கிராம மாதிரியை வெள்ளிக்கிழமை (26) பார்வையிட்ட பின் சங்க உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஒரு பசுவிலிருந்து நாளொன்றிக்கு 5 லீற்றர் பால்பெறமுடியும். ஒவ்வொரு நாளும் 17 கிலோ மீற்றர் தூரங்களுக்குள் உள்ள கறவைப் பசுக்கள் வளர்க்கும் பண்ணையாளர்களிடம் சென்று பால்களை சேகரித்து நண்பகல் 1.00 மணிக்கு முன்பு குறித்த நிலையத்துக்கு வந்து சேர்வார்கள். இதற்கு பிளாஸ்டிக் கொள்கலன்கள் பாவிப்பதை தடுத்து உலோகத்தினாலான கொள்கலன்களைப் பாவிக்க வேண்டும் என சேகரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்படடடுள்ளது.
பால் குளிரூட்டலுக்காக சோலர் பவர் மூலம் மின்சாரத்தைப் பெறல், பால்சேகரிப்பதற்கான போக்குவரத்து வசதிகள் பாற்சங்கங்களுக்கு வழங்கல், பால் பதப்படுத்துதலுடன் பெறுமதி சேர்க்கப்பட்ட செயன்முறைகள் வழங்குமிடத்து மேலும் பொருளாதாரத்தைச் சேமிக்கமுடியும் என்றார்.
இதன்போது, கறவைப் பசுக்களை வளர்ப்போர் மேய்சல் தரையாக 25 முதல் 40 கி.மீ வரையுள்ள புளியப்பொத்தானை, வெள்ளைக்கல், மேச்சல்கல், பிடாரம்போட்டமடு மற்றும் கொட்டாங்கத்தி ஆகிய 5 இடங்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும் வனபரிபாலனத் திணைக்களம் அனுமதியளிக்கவில்லை என தமது விசனத்தைத் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
2 hours ago