Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 29 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிகரம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மாலை திறந்து வைக்கப்பட்டு பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் எஸ்.எப்.ஆர்.டி எனப்படும் நிவாரணத்துக்கும் அபிவிருத்திக்குமான செரண்டிப் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடுகள் திறந்து வைக்கப்பட்டன.
நிவாரணத்துக்கும் அபிவிருத்திக்குமான செரண்டிப் நிறுவனத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மௌலவி எம்.எல்.எம்.வாஜித் மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன செயலாளர் அஸ்ஸெய்ஹ் ஏ.எல்.எம்.சபீல் நழீமி மற்றும் சம்மேளன முக்கியஸ்தர்கள், செரண்டிப் நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள், இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள 13 வீடுகளும் பயணாளிகளிடம் கையளிக்கப்பட்டன. இதன்போது இந்த வீட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான கட்டில், அலுமாரி மற்றும் கதிரைகள் உட்பட வீட்டுத்தளபாடங்களும் வழங்கப்பட்டன.
இந்தக்கிராமத்தில் கலாசார மண்டபம் மற்றும் நூலகம் என்பனவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடும் சுமார் 550,000 ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
2 hours ago
2 hours ago