Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Sudharshini / 2015 ஜூன் 30 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
'எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடகிழக்கில் 20ற்கும் மேற்பட்ட ஆசனங்களைப்பெற்று பலமுள்ள கட்சியாக மாறும்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
மட்டக்களப்பு,புகையிரத வீதியில் திங்கட்கிழமை (29) இரவு இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கiயில்,
'நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதானது தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பினால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடமாகும். 20ஆவது திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்துக்கு கொண்டுவருவதுக்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பழைய விகிதாசார முறைப்படி தேர்தல் நடைபெறவேண்டும் என்பதில் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு உட்பட சிறுபான்மைக்கட்சிகள் மற்றும் சிறு கட்சிகள் உறுதியாக இருந்தன'.
'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் காலத்தில் மட்டும் மக்களிடம் செல்வதில்லை. நாங்கள் தொடர்ச்சியாக மக்களை சந்தித்துவருகின்றோம். அவர்களின் பிரச்சிகளை ஆராய்ந்து முடிந்தவரையில் தீர்த்துவருகின்றோம்'.
'மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலத்தில் இடம்பெற்ற அத்துமீறிய குடியேற்றங்கள் மற்றும் அம்பாறை மாவட்ட பெரும்பான்மையினத்தின் அத்துமீறிய பயிர்ச்செய்கைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தது. அண்மையில் கூட அத்துமீறிய குடியேற்ற வாசிகளுக்கு வாக்காளர் விண்ணப்பங்கள் கூட வழங்கப்பட்ட நிலையில் அவற்றினை நிராகரிக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே குரல்கொடுத்துவந்தது'.
'கடந்த காலத்தில் இருந்த அராஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதுக்கு சிறுபான்மைக்கட்சிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டன. அத்துடன், கடந்த கால ஆட்சியில் கபளீகரம் செய்யப்பட்ட வடக்கிலுள்ள காணிகள் தற்போது படிப்படியாக வழங்கப்பட்டுவருகின்றன. ஏற்கனவே ஆயிரம் ஏக்கர் காணிகள் வடமராட்சியில் வழங்கப்பட்டுள்ளன. அதேபோன்று சம்பூர் பகுதியில் மீள்குடியேற்றத்துக்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன'.
'2010ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் தமிழர்களுக்கு யார் தலைவர்கள் என்று வெளிக்காட்டியது. 2009ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்டதன் பின்னர், தமிழர்களின் தலைவர்கள் யார் என்ற கேள்விக்குறி இருந்தது. இந்நிலையில், 2010ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெற்றது. அதில் 14 பிரதிநிதிகள் வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றோம். அதன்பிறகு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் அமோக வெற்றிபெறச்செய்தனர்'.
'இதேபோன்று, எதிர்வரும் பொதுத்தேர்தலிலும் தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெறும். தமிழ் மக்களுக்கு கைகொடுக்கும் கட்சியாக இந்த நாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே உள்ளது' என அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
2 hours ago