2025 மே 15, வியாழக்கிழமை

165 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி

Thipaan   / 2015 ஜூன் 30 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

இலங்கையின் பாதுகாப்பான குழாய் நீர் விநியோகம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளுக்கான வாய்ப்பு என்பவற்றை அதிகரிப்பதற்கு 165 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க உலக வங்கி முன்வந்துள்ளது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, நுவரெலியா, பதுளை, மொனராகலை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.

உலக வங்கி,; ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இத்திட்டத்தின் கீழ், 2020 ஆம் ஆண்டளவில் இலங்கை இலக்கு வைத்திருக்கும் சுமார் 450,000 பேர் பாதுகாப்பான குழாய் நீர் விநியோகம் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதி வாய்ப்புக்களைப் பெறுவர்.
இதன் மூலம் இலங்கையில் பாதுகாப்பான குழாய் நீர் மற்றும் மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளைப் பெறுவோரின் எண்ணிக்கை 45 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்திட்டத்தின் மூலம் பயனாளிகள் நீர் பெறுவதற்கு அலையும் நீண்ட நேரத்தை மீதப்படுத்துவதோடு அந்த நேரத்தை வேறு பிரயோசமான வழிகளில் செலவிடலாம் என்பதும் இலக்காக உள்ளது.

அத்தோடு இலகுவில் பாதிக்கப்படக் கூடிய சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு நீரினால் ஏற்படும் உபாதைகளைத் தடுத்துக் கொள்ளவும் இத்திட்டம் இன்னொரு புறத்தில் உதவும்.

நீரின் மூலம் பரவும் நோய்களைக் குணப்படுத்துவதற்காக செலவிடுகின்ற பணத்தை ஆக்கபூர்வ வழிகளுக்குச் செலவிடவும், வீட்டு வருமானத்தை அதிகரிக்கவும் நேரத்தை மீதப்படுத்தி  எதிர்மறைத் தாக்கத்தை குறைக்கவும், இத்திட்டம் இலங்கைக்கு உதவும்.

இலங்கைக்கு ஒரு சவாலாக இருந்துகொண்டிருக்கின்ற சிகேடியூ ஊமுனுர (ஊhசழniஉ முனைநெல னுளைநயளந ழக ரnஉநசவயin நவழைடழபல) எனப்படுகின்ற நிச்சயமற்ற நீண்டகால சிறுநீரக நோய்க் காரணிகளை எதிர்கொள்வதற்கும் உரிய நேரத்தில் இத்திட்டம் வருகின்றது என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .