2025 மே 15, வியாழக்கிழமை

மகாஜன கல்லூரியின் 140ஆவது ஆண்டு விழா

Princiya Dixci   / 2015 ஜூன் 30 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
 
மட்டக்களப்பு மகாஜன கல்லூரியின் 140ஆவது ஆண்டு நிறைவு விழா, இன்று செவ்வாய்க்கிழமை (30) வெகு சிறப்பாக இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக கல்லூரி கொடியேற்றப்பட்டு தொடர்ந்து நினைவு ஆண்டாக தாமரை தடாகத்தில் தாமரை கன்றுகள் நாட்டப்பட்டது. அதனை தொடர்ந்து ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து மட்டக்களப்பு நகரை சுற்றி பவணி மேற்கொண்டனர்.

இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

மட்டக்களப்பு நகர் மத்தியில் அமைந்துள்ள மகாஜன மகளிர் கல்லூரி 1875ஆம் ஆண்டு மெதடிஸ்த மிசன் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு மீண்டும் 1925ஆம் ஆண்டு மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் என்று பெயர் மாற்றப்பட்டது.
 
தொடர்ந்து இப்பாடசாலை 1962ஆம் ஆண்டு அரச கட்டுப்பாட்டின் கீழ் இயங்கு பாடசாலையாக உள்வாங்கப்பட்டு இப்பாடசால அரசடி தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயருடன் இயங்கத் தொடங்கியது.

தொடர்ந்து 1976 ஆண்டில் 11ஆம் வகுப்பு வரை மாணவர்களை உள்வாங்கப்பட்டு அரசடி மகா வித்தியாலயமாக திகழ்ந்து. அரசடி மகா வித்தியாலயம் 1992 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மகாஜன கல்லூரி என்ற பெயரை பெற்றுக்கொண்டது.
                           
இக்காலப்பகுதியல் கல்வி பொது சாதாரண தரம் மற்றும் உயர் தர வகுப்புகள் ஆராம்பிக்கப்பட்டதுடன், பல்கலைக்கழகத்துக்கும் மாணவர்கள் தெரிவானார்கள். இதனை தொடர்ந்து 1999ஆம் ஆண்டில் இருந்து மாணவிகளை மட்டும் உள்வாங்கப்பட்டு கல்வித்திணைக்கள அனுமதியை பெற்றுக்கொண்டு 2004ஆம் ஆண்டு இப்பாடசாலை முழுமையாக பெண்கள் கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது பெண்கள் கல்லூரியாக திகழ்கிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .