2025 மே 15, வியாழக்கிழமை

பொது சந்தையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

Princiya Dixci   / 2015 ஜூலை 01 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் பாலையடிவட்டைக் கிராமத்தில் காணப்படும் பொதுச் சந்தைத் தொகுதியை மீள இயங்கச் செய்வது குறித்து போரதீவுப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று செய்வாக்கிழமை (30) கூட்டமொன்று நடைபெற்றது.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரன் உட்பட பிரதேசத்திலுள்ள அரச திணைக்களங்களின் தலைவர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

1957ஆம் ஆண்டிலிருந்து 1990ஆம் ஆண்டு வரை படுவான்கரைப் பிரதேசத்தில் மிகவும் பெயர் பெற்று விளங்கிய இப்பொதுச் சந்தை கட்டடத்தொகுதி 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் தூர்ந்து போய் பயன்படுத்த முடியாமல் காணப்பட்டு வருகின்றது.

2009ஆம் ஆண்டு நெக்டெப் திட்டத்தின் கீழ், 4.5 மில்லியன் ரூபாய் செலவில் புதிய கட்டட வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் சூழல்நிலையில் இப்பொதுச் சந்தையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் இதன்போது தெரிவித்தார்.

அதனடிப்படையில் வாராந்தம் ஞாயிற்றுக்கிழiமை தோறும் இப்பொதுச் சந்தை இயங்கவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 2015.07.12 ஆம் திகதியன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

எனவே, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து உற்பத்தியாளர்களும் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஞாயிற்றுகிழமை தோறும் பாலையடிவட்டை பொதுச் சந்தையில் தமது உற்பத்திகளை தகுந்த முறையில் இப்பகுதி மக்களுக்கு விற்பனை செய்யமுடியும். உள்ளூர் உற்பத்திகளையும் வெளியூர் உற்பத்திகளையும் விற்பனை செய்ய இப்பொதுச் சந்தையை இப்பிரதேச மக்கள் நூறு சதவீதம் பயற்படுத்தி நன்மையடைய முடியும் போரைத்தீவுப்பற்று பிரதே செயலாளர் என். வில்வரெத்தினம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .